skip to main |
skip to sidebar

ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம்
பராஷக்தி பெண்மையை போற்றுடுவோம்!
பாரதி பாடிவைத்தான்
பெண்ணுரிமை ஷக்தியை காத்திடுவோம்!
மங்கையர் தெய்வமேனும்
மானிடரின் பாங்கினை போற்றிடுவோம்!
கல்லென நிற்க வைத்தால்
கயவர்கள் போக்கினை தூற்றிடுவோம்!
ஆணும் பெண்ணும் ஒன்றேனும்
அர்த்தநாரி சிவனை போற்றுகின்றோம்!
பெண்களின் பேச்சுரிமை பொங்கிவர
காதினை மூடுகின்றோம்!
வீட்டுக்குள் பூட்டி வைக்கும்
காலங்களை நாமிங்கு விரட்டி விட்டோம்!
வர்த்தக ரீதியிலே பெண் மானத்தை
காற்றிலே விட்டு விட்டோம்!
கற்பங்கள் ஆணுக்கில்லை
என்றும் அது பெண்மையில் கண்டு வந்தோம்!
பெண் ஷக்தி மிஞ்சுகின்ற
பாரதத்தில் பூமியை வெற்றி கண்டோம்!
வைரபாரதி
பெண் பூவை போற்றுவோம்!
பெண் தீபம் ஏற்றுவோம்!
பெண்களை முன்னேற்றுவோம்!
உலகை மாற்றுவோம்!
இந்திர லோகம் ஏறி
ஆடும் பெண் அன்று! சுற்றி சுற்றி
ஆடும் பெண் அன்று!
சந்திர லோகத்தையே
ஆளும் பெண் இன்று!
வெற்றி பெற்று ஆளும்
பெண் அன்று!
கல்வியே கற்பெனும்
புது கீதம் பாடுவோம்!
கனிவுடன் பண்பிலே
புது வாழ்வை தேடுவோம்!
கோவில் குளம் தனில்
மீன்கள் அலையலாம்-தண்ணீரில்
மீன்கள் நனையலாம்!
தாமரை பூக்கள் தான்
நீரில் நனையுமா?-குளத்தின்
நீரில் இணையுமா?
கண்ணீர் ஊற்றினால்
அகல் விளக்கு எரியுமா?
கல்வியை நம்பினால்
கவலை இல்லை தெரியுமா?
பெண்ணுக்கு
கவலை இல்லை தெரியுமா!
வைரபாரதி
தீபம்..! ஒளி மறந்த
தீபம்!
இருள் நிறைந்த போதும்
இவள் இதயம் போதும்!
கீதம் மௌனங்களின் கீதம்!
கேட்காத பாடல்
அவள் தாலாட்டு தானே!
தீராத தாகம்
தாய் பாலோடு தானே!
கண்ணோவியம் இரவானதா
கண்ணீர் எந்தன் உறவானதா
சிறகென்னை மண்ணில்
உதிர்த்து விட்டு
பறவை அவள் பறந்தாலம்மா
நூறாண்டு காலம்
வாழ்வை என்று சொன்னாள்!
நாலாண்டு தானே
வாழ்க்கை என்று வந்தாள்!
தாய் பாசம் ஓர்
புத்த மனம் தான்!
தாய் பிரிவு ஓர்
போதி மரம் தான்!
சாகாமல் என்றும் வாழ்வதற்கு
கவிதை அவள் தந்தாளம்மா !
வைரபாரதி